தீபாவளி பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்க திருப்பூர் குமரன் சாலை, பார்க் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாகத் திருப்பூர் குமரன் சாலை, பார்க் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்குத் தேவையான பொருட்கள் வாங்கப் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, திருப்பூர் - புதுமார்கெட் வீதியில், தீபாவளி பண்டிகைக்குத் தேவையான ஆடைகள், பேன்சி ஆபரணங்கள், இனிப்பு மற்றும் பட்டாசு வகைகள் வாங்கப் பொதுமக்கள் அதிகளவில் வந்த வண்ணமுள்ளனர்.
திருப்பூர் பொறுத்தவரை பனியன் நிறுவனங்கள் அதிகளவில் உள்ள பகுதி என்பதால் தொழிலாளர்களுக்குக் கடந்த சில நாட்களாகத் தீபாவளி போனசனாது வழங்கப்பட்டு வருகிறது. இதனால் டிவி, ப்ரிட்ஜ், வாசிங்மிசின் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும், கட்டில், பீரோ உள்ளிட்ட பர்னிச்சர் பொருட்களும் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக, புதுமார்க்கெட் வீதி, காமராஜர் சாலை, குமரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டமும், வாகன வரத்தும் அதிகளவில் உள்ளது. இதனால் குமரன் சாலை, பார்க் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் ஏராளமான காவல்துறை ஈடுபட்டுள்ளனர்.