கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 



மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் பேசுகையில்:
“நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்களால் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களிலும் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனமானது திங்கள் முதல் வெள்ளி வரை, அதாவது  திங்கட்கிழமை அன்று மத்திய மண்டலத்திற்கும், செவ்வாய் கிழமை அன்று கிழக்கு மண்டலத்திற்கும், புதன் கிழமை அன்று மேற்கு மண்டலத்திற்கும், வியாழக்கிழமை அன்று தெற்கு மண்டலத்திற்கும், வெள்ளிக் கிழமை அன்று வடக்கு மண்டலத்திற்கும் நாள்தோறும் அந்தந்த வார்டுகளுக்குச் சென்று பொது மக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை குறைதீர்ககும் பெட்டியில் போடப்பட்டு, அம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மேற்கண்ட ஐந்து மண்டலங்களின் அலுவலகத்திற்கு தினமும் மாலை 4.30 மணியளவில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்களிடமும் நேரடியாகச் சென்று பொது மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வடக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.




இக்கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக தெரு விளக்குகள், குப்பைகளை அகற்றுதல், குடிநீர் குறைபாடு, சாக்கடை தூர்வாறுதல், மாநகராட்சி இடத்தில் பூங்கா அமைத்தல் என பல்வேறு உதவிகள் கோரி 24 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.” இவ்வாறு அவர்  தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் மக்கள் தொடர்பு அலுவலர் திவாகர், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணக்குமார், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்க்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...