பொள்ளாச்சி பாலியல் வழக்கு; வீடியோ கான்பரன்சிங் மூலம் குற்றவாளிகள் ஆஜர்..!

கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, வழக்கு விசாரணையை வரும் 11ம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.


கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி வழக்கு விசாரணையை வருகிற 11-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளை ஒரு கும்பல் ஆபாசமாக வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்து பணம் மற்றும் நகை பறித்ததாக கடந்த 2019ம் ஆண்டு புகார் எழுந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதலில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர்.

பின்னர், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரி ராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருள் அனந்த், பாபு, அருண்குமார், ஹரன் பால் என இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது 8 பெண்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று மாலை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

எனவே, சேலம் மத்திய சிறை மற்றும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் 9 பேரும் காணொளி காட்சி வழியாக நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி வழக்கு விசாரணையை வருகிற 11-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...