கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 2-நாட்களில் நடைப்பெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியின் மூலம் 12,951-மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்.
கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் நடைப்பெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியின் மூலம் 12,951 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட தொகுதிகளுக்குட்பட்ட 5 முதல் 11 வரையிலான வார்டு பகுதிகளில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சா் செந்தில்பாலாஜி பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள பொதுமக்கள் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் இதர வசதிகள் தொடர்பான குறைகள் குறித்த கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிடும் வகையில் கோவை மேற்கு சட்டமன்ற தொகுகிகளுக்குட்பட்ட வார்டு பகுதிகளில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் மக்கள் சபை நிகழ்ச்சி இன்று 01.11.2021 நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா வரவேற்புரையாற்றினார். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
கோயம்புத்தார் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.9 மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ஹவுசிங் யூனிட், மேட்டு்ப்பாளைம் சாலை, வார்டு எண்.5 கல்பனா திருமண மண்டபம், கவுண்டம்பாளையம், வார்டு எண்.8 அரசு மேல்நிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம், வார்டு எண். 6 அங்கப்பா மேல்நிலைப்பள்ளி, இடையர்பாளையம், வார்டு எண்.7 மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, இடையர்பாளையம், வார்டு எண்.11 மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கே.கே.புதூர், வார்டு எண்.10 சாய்பாபா மெட்ரிகுலேசன் பள்ளி சாய்பாபா காலனி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சிகளில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தாவைத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும், நகராட்சி, பேரூராட்சி என 50 இடங்களிலும், மொத்தம் 150 இடங்களில் மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகள் நேரில் சென்று மக்களை சந்தித்து மனுக்களை பெறும் மாபெரும் மக்கள் சபை நிகழ்ச்சிக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வரவேற்புரையாற்றிய மதிப்பிற்குரிய மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கும், இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்து மாவட்டம் முழுவதும் முதலமைச்சரின் எண்ணங்களை, திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திக்கொண்டு இருக்கின்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து இங்கு வந்துள்ள பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் உங்கள் அனைவருக்கும் நான் ஓரு உறுதியளிக்கிறேன் இங்கு வருகை தந்துள்ள மாவட்டத்தின் அனைத்து துறையைச் சார்ந்த அதிகாரிகளும் உங்களது கோரிக்கை மனுக்கள் மீது உரிய வகையில் மிக விரைவாக ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து முதலமைச்சரின் அரசு உத்தரவுகள் உங்கள் கரங்களில் விரைவாக கொண்டுவந்து சோக்கப்படும் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் இதுவரை நடைபெறாத ஒரு சரித்திர சாதனையாக முதலமைச்சர் கோயம்புத்தூர் மாநகராட்சியில் 100 வார்டுகளில் ஒரு வார்டுக்கு ஒரு இடமென தோர்வு செய்யப்பட்டு பொதுமக்களை நேரில் சென்று சந்தித்து மனுக்களை பெற்று அதற்கு உரிய தரவுகளைக் காணவேண்டுமென உத்தரவுகளை வழங்கியிருக்கின்றார்.
கோவை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் யாருக்கெல்லாம் முதியோர் உதவித்தொகை விண்ணப்பித்து விடுபட்டிருக்கிறது என கண்டறியப்பட்டு விரைவாக தளபதி ஆட்சியில் அனைவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்ற உறுதியையும், இந்தப்பகுதியில் அதிகமாக தங்க நகைகள் செய்யக்கூடிய தொழில் வாத்தகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன அவர்களுக்கு பல்வேறு இன்னல்கள், இடையூறுகள், தேவைகள் இருக்கின்றன அந்த தேவைகளைக் கேட்டு முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று விரைவாக நிறைவேற்றப்படும் என்ற உறுதியையும், கோவை மாநகராட்சியை பொறுத்தவரை நேற்று நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில் பொதுமக்கள் அளித்த மனுக்களில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 9 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றும், அதேபோல் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதுமே ஏறத்தாழ ஒரு வார காலத்திற்கு மேலாகத்தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
எனவே, அதனை கருத்தில் கொண்டு மிக விரைவாக கோவை மாநகராட்சிப் பகுதிகள் முழுவதும் கணக்கெடுக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யும் அளவிற்கு முதலமைச்சர் உத்தரவின்படி சிறப்புத் திட்டம் அமைக்கப்பட்டு, சிறப்பு நிதிகள் பெற்று மேம்படுத்தக் கூடிய பணிகளை முன்னெடுக்கப்பட உள்ளது.
அதற்கு தயார் செய்யக் கூடிய பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பிலும், குடிநீர் வாரியத்தின் சார்பிலும் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல் இந்த பகுதிகளிலுள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்டு அடைப்புகள் சரிசெய்யப்படும். மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.
அதனை மிக விரைவாக இந்த பகுதி முழுவதும் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கான நிதிகளை பெற்று அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியையும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து சாலைகளும் கணக்கெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு அதற்கான சிறப்பு நிதிகளை பெற்று சாலைகள் சரிசெய்யப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்.
மேலும் தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் 505 வாக்குறுதிகளைத் தந்தார்கள். அதில் முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற 5 மாத காலத்தில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றித் தந்திருக்கின்றார்.
குறிப்பாக தாய்மார்களுக்கு குடும்ப அட்டைகளுக்கு 4 ஆயிரம் நிவாரண உதவித்தொகை மற்றும் கோவிட் காலத்தில் 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கியிருக்கின்றார். பெட்ரோல் விலை மற்றும் ஆவின் பால் விற்பனை விலைகளை குறைத்துள்ளார். மேலும், அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்திருக்கின்றார். கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு, மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகள் உட்பட 234 தொகுதிகளிலும் பல்வேறு சிறப்பு திட்டங்களை முதலமைச்சர் வழங்க இருக்கின்றார்கள். மேலும், இந்நிகழ்ச்சிக்கு வந்து மனுக்களை கொடுத்துள்ள அனைவரின் கோரிக்கைகள் மீதும் நிச்சயம் துறை ரீதியாக தாவு காணப்படும் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷாமிளா, முன்னாள் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், முன்னாள் பேரூராட்சித் தலைவா் பையா கிருஷ்ணன், மேற்கு மண்டல உதவி ஆணையார் டி.சிவசுப்பிர மணியன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.