தமிழக தலைமை செயலர் வீட்டில் சோதனையிட்டதற்கு ஏன் மம்தா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் ? என பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் கேள்வி


தமிழக தலைமை செயலர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை செய்ததற்கு தமிழக முதல்வரும், எதிர்க் கட்சி தலைவரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் மம்தா ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கேள்வி எழுப்பி உள்ளார்.

பாஜக இளைஞர் அணி செயற்குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க -வின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பேசுகையில்,

தமிழக தலைமை செயலர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே போல் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஸ்டாலினும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா ஏன் வருமான வரித் துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

வருமான வரித்துறை சோதனைகளை எதிர்ப்பவர்கள் கறுப்பு பணத்தை ஆதரிப்பவர்கள் தான் என தெரிவித்தார். மேலும், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் சசிகலா-வை சென்று பார்த்தது எந்த மாநிலத்திலும் நடக்காத நிகழ்வு!. இந்த அணுகுமுறை ஏற்றுகொள்ளத்தக்கது அல்ல என கூறினார். 

மேலும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்திற்கு ஆதரவாக தான் செயல்பட்டு வருகிறது. தற்போது சட்ட ரீதியான ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு வாரணாசியில் பிரதமர் மோடி பதிலளித்துவிட்டதாக கூறினார்.

Newsletter

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...