கோவை பழைய கார் குடோன் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்துச் செயல்பட்டதா? அதிகாரிகள் விசாரணை.!!

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பழைய கார் குடோனில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனிடையே, அந்த குடோன் உள்ள இடம் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டிய இடம் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பழைய கார் குடோனில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனிடையே, அந்த குடோன் உள்ள இடம் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டிய இடம் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை ராமநாதபுரம்-நஞ்சுண்டாபுரம் ரோட்டில் ஸ்ரீபதி நகர் உள்ளது. இப்பகுதியில், குடியிருப்புகள் நடுவில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் தனியாருக்குச் சொந்தமான பழைய கார் குடோன் செயல்பட்டு வருகிறது.

இங்கு, பழைய கார்களின் உதிரி பாகங்களும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பழைய கார்கள் அனைத்தும் ஒரு இடத்தில் மொத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தவிர, பழைய கார்களில் இருந்து அகற்றப்பட்ட பொருட்கள், கழிவுகள் அனைத்தும் ஒரு இடத்தில் மொத்தமாகக் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.



இந்நிலையில், நேற்று முன் தினம் மதியம் சுமார் 1.30 மணியளவில் இந்த பழைய கார் குடோன் தீ பிடித்தது. 



இந்த தீ விபத்தில் பழைய கார்கள், அதன் உதிரி பாகங்கள் என ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியது. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கார் குடோன் அமைக்கப்பட்ட இடம் ஸ்கீம் சாலைக்கான இடம். மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டிய இடம். இந்த இடம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அப்பகுதியில் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கவும், நடந்த சம்பவம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அந்த குடோன் உரிமையாளருக்கு நோட்டீஸ் விரைவில் வழங்கப்பட உள்ளது.

மேலும் அப்பகுதிகளில் இது போன்ற இடங்கள் மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்கள் உள்ளனவா என கண்டறிந்து அதில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதனை உடனே அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...