கோவையில் மகன் திருமணத்திற்கு ஜவுளி எடுக்க சென்றவர் பாத்ரூமில் தவறி விழுந்து சாவு.!!

கோவையில் மகன் திருமணத்திற்கு ஜவுளி எடுக்க ஜவுளிக்கடைக்கு சென்றவர் பாத்ரூமில் தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக பலியானார்.


கோவை: கோவையில் மகன் திருமணத்திற்கு ஜவுளி எடுக்க ஜவுளிக்கடைக்கு சென்ற அவர் பாத்ரூமில் தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாகப் பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெள்ளலூர் அருகே உள்ள கோணவாய்க்கால் பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் வயது 53, வெல்டிங் ஒர்க் ஷாப் தொழிலாளி. இவர் நேற்று தனது மகனின் திருமண நிகழ்ச்சிக்கு ஜவுளித் வாங்குவதற்காக டவுன் ஹாலில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்குச் சென்றார்.

ஜவுளிகளை வாங்கி முடித்த பின்னர் உக்கடம் பஸ் நிலையத்தில் உள்ள பொது கழிப்பிடத்தை அருகே சென்றார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராமநாதனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...