தொழில் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.100-கோடி வரை முதலீடு செய்யத் திட்டம் - ஸ்ரீதர் வேம்பு.!!

கொங்கு மண்டலத்தில் தொழில் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.50-கோடி முதல் ரூ.100-கோடி வரை முதலீடு செய்து உதவுவோம் என சோஹோ நிறுவன தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.


கோவை: கொங்கு மண்டலத்தில் தொழில் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.50-கோடி முதல் ரூ.100-கோடி வரை முதலீடு செய்து உதவுவோம் என சோஹோ நிறுவன தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சோகோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு கொங்கு மண்டலத்தில் உள்ள கரூர், ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை நகரங்களில் ஒரு வாரமாகச் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் உள்ளூர் தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.



கோவையில் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கொங்கு மண்டலத்தின் வளமைக்கு, இங்கு இருக்கும் பல தரப்பட்ட தொழில் துறைகள் மற்றும் அப்பகுதி மக்களின் ஒத்துழைப்பும், சமுதாய அர்ப்பணிப்பும் முக்கிய காரணமாகும்.

தற்போதைய நிலையிலிருந்து ஜப்பான், தைவான், தென் கொரியா போன்ற நாடுகளைப் போல் முழுமையாகக் கொங்கு மண்டலம் வளர்ச்சி அடைய வேண்டும். இதற்கு நாம் ஆராய்ச்சி மற்றும் தொழில் மேம்பாட்டிற்கு முதலீடு செய்ய வேண்டும். கொங்கு மண்டலத்தில் தொழில் அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக்காக ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை உதவ முன் வந்துள்ளோம்.

இங்குள்ள தொழில் அமைப்புகளுடன் இணைந்து ஆராய்ச்சியை மேம்படுத்தி, நவீன கருவிகளை உருவாக்கி, கோவையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி சோஹோவின் பரந்த ஆராய்ச்சி மற்றும் தொழில் மேம்பாட்டு அனுபவமும் இதில் முக்கிய பங்கு வகிக்கும்.

சோஹோ மற்றும் கொங்கு மண்டலத்தில் உள்ள பல துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கும் இந்த கூட்டமைப்பின் மூலம் நாம் இப்பகுதியை மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் தமிழ்நாட்டை இந்தியா முழுவதற்கும் ஒரு முன்மாதிரியாக மாற்ற முடியும்.

இந்த முயற்சியை ஒரு நிறுவனத்தால் மட்டும் செய்ய முடியாது. சோஹோ உள்ளூர் நிறுவனங்களுடன் ஒரு கூட்டமைப்பை அனைத்து கொங்கு மண்டலத்தில் உள்ள பல்வேறு தொழிற்துறைகளில் குறிப்பாக ஜவுளி பொருட்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு, நூற்பாலைகள், வேளாண்மை, எந்திரவியல் உள்ளிட்டவற்றில் பங்கேற்கும் என்றார். இந்த பேட்டியின் போது சிபி என்.பி. ஆனந்த் உடனிருந்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...