திருப்பூர் அருகே மின்னல் தாக்கி 35 ஆடுகள் பரிதாப பலி; 30க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த 'டிவி'க்கள் பழுதாகின.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 35 ஆடுகள் நேற்று மின்னல் தாக்கியதில் பரிதாபமாக பலி.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 35 ஆடுகள் நேற்று இடி மின்னல் தாக்கியதில் பரிதாபமாக பலியாகினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த ஓலப்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகணேச மூர்த்தி (57), விவசாயி. நேற்று மாலை, மேய்ச்சலுக்கு சென்று வந்த 80 செம்மறி ஆடுகளை, தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துச் சென்றார்.

இந்த நிலையில், நேற்று இரவு நீண்ட நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது, தோட்டத்தில் இருந்த தென்னை மரம் மீது மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்துள்ளது.. விபத்தில்,மரத்தை ஒட்டியிருந்த பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில், 35 ஆடுகள் கருகி பலியாகின.

புகாரின் பேரில், காங்கேயம் தாசில்தார் சிவகாமி, கால்நடை மருத்துவர் குழுவினர் ஆய்வு நடத்தினர். ஓலப்பாளையம், கொளிஞ்சிகாட்டு வலசு பகுதியில் இடி, மின்னல் காரணமாக 30க்கும் மேற்பட்ட வீடுகளில், 'டிவி' உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...