ஒப்பந்த பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பொள்ளாச்சியில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..!!

மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு அறிவித்த முழு ஊதியத்தை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார துப்புரவு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.



மேலும், பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வழங்க உத்தரவிட்ட ஊதியத் தொகையை ஒப்பந்ததாரர்கள் வழங்காமல் ஊதியத்தை குறைத்து வழங்கி அவர்களின் உழைப்பை சுரண்டி வருவதாகவும், இதனால் உடல் உழைப்பை தரும் துப்புரவு பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, துப்புரவு பணியாளர்களுக்கு அறிவித்த முழு ஊதியத்தை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...