கோவையில் விஷ நெடி கலந்த மது விற்பனை செய்தவர் கைது.!!

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் இரகசியங்கள் காக்கப்படும்.



கோவை: கோவையில் விஷ நெடி கலந்த மது விற்பனை செய்தவரை மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினம் உத்தரவில் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

கோவை மாவட்ட காவல் துறை சார்பாக எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் போலீசார் கஞ்சா, மது, சூதாட்டம், போதை மாத்திரை, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் உட்பட சட்டவிரோதமாக விற்பனை செய்யக்கூடிய அனைவரையும் தனிப்படை அமைத்து ரோந்துப்பணியில் மூலமாக அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஷ நெடி கலந்த மதுவை மறைத்து வைத்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்களுக்கு, மதுபான பாட்டில்களை விற்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சம்பவ இடமான துடியலூர் கோவில் மேடு பகுதிக்குச் சென்று சட்டத்திற்கு விரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த M.பழனிவேல்(31) என்பவரை மதுவிலக்கு அமலாக்கத் துறை ஆய்வாளர் மீனா பிரியா, M.பழனி வேல் என்பவரைக் கைது செய்து மேற்படி நபரை விசாரித்தபோது, அவர் விஷநெடி கலந்த மதுபான பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. மேற்படி பாட்டில்களைப் பறிமுதல் செய்தும் மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் இரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...