13 வயது சிறுமி மாயம்; முகநூல் காதலை நம்பி சென்றாரா? என்ற கோணத்தில் போலீசார் தேடல்

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முகநூல் காதல் மூலமாக முகம் தெரியாத வாலிபருடன் அந்த சிறுமி சென்றாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


கோவை: காரமடை அருகே உள்ள தோளாம்பாளையத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் மூலமாக பாடம் படித்துவந்தார்.

இதற்காக அவரது பெற்றோர் சிறுமிக்கு செல்போன் வாங்கி கொடுத்து இருந்தனர். பாடம் படித்து முடித்துவிட்டு, மீதி நேரத்தில் சிறுமி செல்போன் மூலம் தனது நண்பர்களுடன் ஃபேஸ்புக் போன்ற செயலிகள் மூலமாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு பேஸ்புக் மூலமாக சேலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் நட்பு கிடைத்தது.

நாளடைவில், அவர்கள் நட்பு, காதலாக மாறியதுள்ளது. இருவரும், செல்போன் எண்களை மாற்றி கொண்டு, அதன் மூலமாக பேசி காதலை வளர்த்து வந்தனர். இந்த விவகாரம் சிறுமி வீட்டிற்கு தெரியவந்ததையடுத்து, பெற்றோர்கள் அந்த சிறுமியை கண்டித்தனர். இது குறித்து தனது காதலனிடம் கூறிய சிறுமியிடம், நான் உன்னை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்கிறேன், அதுவரை கொஞ்சம் பொறுமையாக இரு என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, அந்த வாலிபருடன் பேசுவதை பார்த்த அந்த சிறுமியின் பெற்றோர், அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமாகி விட்டார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், சிறுமியின் பெற்றோர் காரமடை போலீஸில் புகார் தெரிவித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முகநூல் காதல் மூலமாக முகம் தெரியாத வாலிபருடன் அந்த சிறுமி சென்றாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...