செயல்படாத நிலையில் இருக்கும் இந்தியன் வங்கி ஏ.டி.எம்-மிற்கு மாலை அணிவித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் நூதன போராட்டம்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செயல்படாத நிலையில் இருக்கும் இந்தியன் வங்கி ஏ.டி.எம்-மிற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ம் தேதி அமல்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக மக்கள் மத்தியில் பணபுழக்கம் தடைபட்டுள்ளது. பணம் எடுக்க மக்கள் வங்கிகள் முன்பாகவும், ஏ.டி.எம் மையங்கள் முன்பாகவும் நாள்தோறும் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகின்றது. 

கோவையில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளின் 90 சதவிகித ஏ.டி.எம்கள் செயல்படாமல் இருந்து வருகின்றது. 

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செயல்படாத நிலையில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்திற்கு அனைத்திந்த இளைஞர் பெருமன்றத்தினர் மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



அப்போது வங்கி ஏ.டி.எம்-கள் அனைத்தும் முழுமையாக செயல்படவும், 100 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் தடையின்றி கிடைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தை மாற்றுவதற்காக காலத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவினையும் அவர்கள் வழங்கினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...