கொசிமாவின்‌ 48-வது பொதுக் குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.!!

அச்சுறுத்தி வரும்‌ சீனப்‌ பொருட்களின்‌ தன்னிச்சையான ஆக்கிரமிப்பை அகற்றவும்‌, இறக்குமதி சார்ந்த மூலப்பொருட்கள்‌ மற்றும்‌ உதிரிப்பாகங்களின்‌ தட்டுப்பாட்டை போக்கவும், உள்ளிட்ட தீர்மானங்கள் கொசிமாவின்‌ 48-வது பொதுக் குழுக் கூட்டத்தில்‌ நிறைவேற்றப்பட்டன.



கோவை: கொசிமாவின்‌ 48-வது பொதுக் குழுக் கூட்டத்தில்‌ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

20.10.2021 அன்று நடைபெற்ற கொசிமாவின்‌ 48-வது பொதுக் குழுக் கூட்டத்தில்‌ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று தமிழ்நாட்டை சீரிய முறையில்‌ புதிய தொலை நோக்குடன்‌ வழி நடத்திவரும்‌ முதலமைச்சர்‌, அவரது அமைச்சரவையில்‌ பொறுப்பேற்று இருக்கும்‌ அமைச்சர்‌ பெருமக்கள்‌ மற்றும்‌ சட்டமன்ற உறுப்பினர்கள்‌, அரசு நிர்வாக துறையில்‌ பங்கேற்று இருக்கும்‌ அரசு செயலர்கள்‌ அனைவருக்கும்‌ கோயமுத்தூர்‌ சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள்‌ நலச்சங்கத்தின்‌ சார்பில்‌ வாழ்த்துகளையும்‌ வணக்கங்களையும்‌ உரித்தாக்குகிறோம்.

தற்சமயம்‌ ஏற்பட்டுள்ள தொழில்‌ நெருக்கடி காரணமாக எழுந்துள்ள பிரச்சனைகளைப் பரிவுடன்‌ அரசு கவனித்து திட்டங்களை முனைப்புடன்‌ செயல்‌ படுத்த வேண்டும்‌ என இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

நிமிடத்திற்கு நிமிடம்‌ விலையேறிக்கொண்டிருக்கும்‌ மூலப்பொருள்களின்‌ விலைகளைக் கட்டுக்குள்‌ வைத்து சீரான விலையில்‌ தொழில்‌ முனைவோருக்கு வழங்கிட மத்திய மாநில அரசுகள்‌ முழு முயற்சியுடன்‌ செயல்பட வேண்டும்‌ என கேட்டுக்கொள்ளப்படுகிறது. விலைகளைக் கண்காணித்து அவற்றைச் சீர்படுத்த முக்கிய தொழில்‌ அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌ அடங்கிய மாநில வாரியாக ஒரு Price Monitoring Committee ஏற்படுத்திட அரசுகள் முனைப்புடன்‌ உதவிட வேண்டும்‌.

தற்போது பெருந்தொற்று காரணமாகத் தொழில்‌ துறை சொல்ல முடியாத இடர்களைச் சந்தித்துக்கொண்டுள்ளது. குறிப்பாகச் சிறு, குறு தொழில்‌ முனைவோர்‌ ஆள்‌ பற்றாக்குறையால்‌ தவித்துக்கொண்டுள்ளனர்‌. இதைச்‌ சரிக்கட்டத் தொழில்முறை பணியாளர்களை உருவாக்கத் திறன்‌ மேம்பாட்டுப் பயிற்சியை அளித்து திறன்மிகு தொழிலாளர்களை உருவாக்க உதவிட வேண்டுமாய்‌ மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக்‌கொள்கிறோம்‌.

சிட்கோ தொழிற்பேட்டையில்‌ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு ஒதுக்கிய நிதியை உடனே வழங்கி, நமது தொழிற்பேட்டையை உலகத்தரம்‌ வாய்ந்ததாக அமைய உதவிட வேண்டுமாய்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறது, திறன்‌ மேம்பாட்டு பயிற்சியகங்கள்‌ மற்றும்‌ சோதனைக்‌ கூடங்களைத் தொழில்‌ அமைப்புகளுடன்‌ இணைந்து நிறுவிட மத்திய மாநில அரசுகளை மானியங்கள்‌ வழங்கி ஊக்குவிக்க வேண்டுமாய்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சிட்கோவில்‌ அமைந்துள்ள 100,200 kva மின்மாற்றி களை 500 kva மின்மாற்றி யாக நிறுவித்‌ தர வேண்டுமாய்‌ மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறோம்.‌

சிட்கோவில்‌ ஏற்கனவே இயங்கி வந்த, தற்போது செயல்படாமல்‌ இருக்கும்‌ மூலப்பொருள்‌ கிடங்கை உடனடியாக திறந்து, இப்பகுதி தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை உடனுக்குடன்‌ வழங்கி உதவிட வேண்டுமாய்‌ மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறோம்.‌

குறுந்தொழில்கள்‌ துவங்க அடுக்குமாடி தொழிற்பேட்டையை அமைத்துத் தருவதுடன்‌, தொழிலகங்களில்‌ பணிபுரியும்‌ தொழிலாளர்கள்‌ தங்குவதற்குத் தங்கும்‌ விடுதி கட்டிக் கொடுத்து உதவிட வேண்டுமாய்‌ மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறோம்.‌

சிட்கோ மற்றும்‌ சுற்று வட்டாரங்களில்‌, குவிந்துள்ள குப்பையை அகற்ற நிரந்தர தீர்வு காண வேண்டுமாய்‌ மத்திய மாநில 'அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்.‌

Covid 19-பெரும்‌ தொற்று காரணமாக ஓராண்டுக்கு வரி இனங்களிலிருந்து தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டுமாய்‌ கோவை மாநகராட்சியை கேட்டுக்கொள்கிறோம்.‌

அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ தொழிற்பேட்டைகளுக்கு மத்திய மாநில அரசுகள்‌ வழங்கும்‌ சலுகைகள்‌ அனைத்தும்‌ தனியார்‌ தொழிற்‌ பேட்டைகளுக்கும்‌ வழங்கி உதவிட வேண்டுமாய்‌ மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

புதிதாக ஏற்படுத்தப்படும்‌ தனியார் தொழிற்பேட்டைகள்‌ உள்கட்டமைப்பு வசதிகள்‌ செய்ய மாநில மற்றும்‌ மத்திய அரசு வழங்கும்‌ மானியத்தை உடனடியாக வழங்கி உதவிட கேட்டுக்கொள்கிறோம்‌.

கோவைக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்‌ அறிவிக்கப்பட்ட இரயில்‌ பெட்டி தொழிற்சாலையைக் கொண்டு வர வேண்டுமாய்‌ மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

தமிழ்நாடு தொழில்‌ முதலீட்டுக் கழகத்தால்‌ வழங்க படும்‌ கடன்களுக்கு பின்னுட்ட வட்டி மானியம்‌ 6 சதவிகிதம்‌ மார்ச்‌ -31 வரை இருப்பதைக் காலவரையின்றி நீட்டிக்க வேண்டுமாய்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில்‌ செயல்‌ கடன்‌ உதவியை (Working Capital Loan) 40-சதவீதமாக உயர்த்த வேண்டும்‌. தற்போதுள்ள நடைமுறை படி மூலதன கடன்‌ உதவி நடப்பு ஜி.எஸ்டி முறையில்‌ பல சிரமங்களுக்குத் தொழில்‌ நிறுவனங்கள்‌ ஆட்படுத்தப்படுகிறது. இந்த முறை மாற்றப்பட்டு நிறுவனங்களுக்கு இணக்கமான முறையில்‌ வங்கிகளின்‌ நடைமுறை அமைய வேண்டுமாய்‌ இந்த குழு கேட்டுக்‌ கொள்கிறது.

மானியத்‌ தொகை பெறுவதில்‌ உள்ள சிரமங்கள்‌ மற்றும்‌ தேவையற்ற கெடுபிடிகள்‌ இன்றி பயனீட்டாளர்களுக்கு வழங்கிட வேண்டுமாய்‌ இந்த குழு கேட்டுக்‌ கொள்கிறது.

அச்சுறுத்தி வரும்‌ சீனப்‌ பொருட்களின்‌ தன்னிச்சையான ஆக்கிரமிப்பை அகற்றவும்‌, இறக்குமதி சார்ந்த மூலப்பொருட்கள்‌ மற்றும்‌ உதிரிப்பாகங்களின்‌ தட்டுப்பாட்டை போக்கவும்‌, உள்நாட்டுத் தொழில்களைச் சர்வதேச தரத்துடன்‌ தொழில்கள்‌ செயல்பட அரசு இணக்கமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...