கோவையில் மளிகைக்கடை பெண் உரிமையாளரிடம் சிகரெட் வாங்குவது போல் நடித்து செயின் பறிப்பு.!!

மளிகைக் கடை பெண் உரிமையாளரிடம் சிகரெட் வாங்குவது போல் நடித்து ஐந்தரை பவுன் செயினை பறித்துச் சென்ற வாலிபர்களை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: மளிகைக் கடை பெண் உரிமையாளரிடம் சிகரெட் வாங்குவது போல் நடித்து ஐந்தரை பவுன் செயினை பறித்துச் சென்ற வாலிபர்களை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரக்கூடிய பெண் உரிமையாளரிடம் மர்ம நபர்கள் சிகரெட் வாங்குவது போல் நடித்து அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருந்த 5-பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். கோவை குனியமுத்தூர் அருகே உள்ள எம்.எஸ். காலனி சேர்ந்தவர் செல்வக்குமார் இவரது மனைவி தனலட்சுமி வயது 32. இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று கடையிலிருந்தபோது இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் தனலட்சுமியிடம் வந்து சிகரெட் கேட்டனர் அவர் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தபோது அந்த வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தனலட்சுமி கழுத்திலிருந்த 5- அரை பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணின் செயினை பறித்துச் சென்ற வாலிபர்களை சிசிடிவி கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...