தென்மேற்கு பருவமழை விலகி வரும் 26ம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்க சாதகமான சூழல் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கில் வரும் 26ம் தேதி முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.


கோவை: தென்மேற்கு பருவமழை விலகி வரும் 26ம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்க சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், தென் மேற்கு பருவ மழை தீவிரம் காட்டி உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக பெய்யும் கன மழையால், தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கேரளா மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் அணைகள் நிரம்பி, பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கில், வரும் 26ம் தேதி முதல், வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், தென்மேற்கு பருவ மழை இந்திய பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்கு பருவ மழை 26ல் துவங்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...