தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அரசு போக்குவரத்து பெண் ஊழியர் தர்ணா..!

தற்போது பணி செய்துவரும் தாராபுரம் போக்குவரத்து பணிமனையில் வேலையை தொடர்ந்து செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு தர்ணாவில் ஈடுபட்டார்.


திருப்பூர்: தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அரசு போக்குவரத்து பெண் ஊழியர் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசு போக்குவரத்து பணிமனையில் ஸ்டோர் மேனேஜ்மென்ட்-ல் வேலை செய்து வருபவர் ரேவதி(26). கணவர் ராதாகிருஷ்ணன். இவர்கள் உடுமலை சாலையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று ரேவதி தனது வேலை பணி மாறுதல் தொடர்பாக தாராபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் திமுகவைச் சேர்ந்த நல்ல சேனாபதியை சந்தித்துள்ளார். தற்போது பணி செய்துவரும் தாராபுரம் போக்குவரத்து பணிமனையில் வேலையை தொடர்ந்து செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுள்ளார்.

அதற்கு தொமுச தொழிற்சங்க நிர்வாகியான நல்ல சேனாபதி ரேவதியை பார்த்து நீ அதிமுக ஆதரவில் 2014ம் ஆண்டு பணியில் அமர்த்தப்பட்டவர் ஆனால் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. நீ அதிமுக ஆதரவாளராக இருப்பதால் தாராபுரம் டிப்போவில் வேலை செய்வதற்கு உனக்கு இடம் கிடையாது என ஒருமையில் திட்டியுள்ளார்.

அதற்கு தனது 6 வயது குழந்தை உள்ளதால் குழந்தையின் படிப்பு பாதித்துவிடும். ஆதலால் தனக்கு தாராபுரம் டிப்போவில் தொடர்ந்து பணியாற்ற உதவிடுமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அதை பொருட்படுத்தாத தொழிற்சங்க திமுக நிர்வாகி நல்ல சேனாபதி இவரை தகாத வார்த்தையில் திட்டி அடித்து துன்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரேவதி பேருந்து பணிமனை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தாராபுரம் போலீசார் அவரை அழைத்துப் பேசினர். பின்னர், அவர் அரசு மருத்துவமனையில் அடிபட்ட காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை பெற்று வருகிறார். தனக்கு நியாயம் கிடைக்கும்வரை உறுதியாக நின்று தனது கணவருடன் சேர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...