கோவை கணபதியில் இருக்கும் ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ் சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்து வரும் சில தினங்களுக்கு ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கியிருந்து ஓ.பி.எஸ் சிகிச்சை பெற இருக்கிறார்.
கோவை: கோவை கணபதியில் இருக்கும் ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக முன்னாள் துணை முதல்வரும்,அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு கோவை வந்தார்.
இதனை தொடர்ந்து, கோவை கணபதியில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனைக்குச் சென்றுள்ள ஓ.பி.எஸ் தற்போது அங்குச் சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு ஆயில் மசாஜ், நீராவி மற்றும் எண்ணெய் குளியல் போன்ற பல்வேறு ஆயுர்வேத புத்துணர்வு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அடுத்து வரும் சில தினங்களுக்கு ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கியிருந்து ஓ.பி.எஸ் சிகிச்சை பெற இருக்கிறார். இதன் காரணமாக அங்குப் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.
இதற்கு முன்பாக ஆயுர்வேத புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக ஓ. பன்னீர்செல்வம் கோவைக்கு 4 முறை வந்துள்ளார். தற்போது 5-வது முறையாகப் புத்துணர்வு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.