சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்.பி சுழற்கோப்பை வழங்கி பாராட்டு.!!

கோவையில் இன்று மாதாந்திர குற்ற விவாதிக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த குற்ற விவாதிப்பு கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்குக் கேடயம் வழங்கி எஸ்.பி. செல்வநாகரத்தினம் பாராட்டு தெரிவித்தார்.


கோவை: மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்குக் கேடயம் வழங்கி எஸ்.பி. செல்வநாகரத்தினம் பாராட்டு தெரிவித்தார்.

கோவையில் இன்று மாதாந்திர குற்ற விவாதிக்கக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு எஸ்.பி. செல்வநாகரத்தினம் தலைமை தாங்கினார். கூட்டத்தின் முடிவில் சிறப்பாகச் செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்குச் சுழற்கோப்பை பாராட்டுப் பத்திரம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.



கோவை மாவட்டத்தில் இன்று நடந்த மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



சிறப்பாக பணிபுரிந்த துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன், துடியலூர் உதவி ஆய்வாளர் ஜெகநாதன் நிலைய பதிவேடுகளைச் சிறப்பான முறையில் பராமரித்த சூலூர் காவல் நிலைய எழுத்தர் சந்துரு, சிறந்த முறையில் CCTNS-ல் கோப்புகளைப் பதிவேற்றம் செய்த கருமத்தம் பட்டி காவல் நிலைய முதல்நிலை பெண் காவலர் சந்திரலேகா, சிறப்பான முறையில் வழக்கினை கோப்பிற்கு எடுத்துத் திறம்படச் செயல்பட்ட பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய தலைமைக் காவலர் நவநீதன் ஆகியோர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களையும் சிறந்த காவல் நிலையமாக துடியலூர் காவல் நிலையம் தேர்வு செய்து அதற்கான சுழற்கோப்பையை துடியலூர் காவல் ஆய்வாளருக்கும் மற்றும் சிறந்த உட்கோட்டமாக பெரியநாயக்கன் பாளையம் உட்கோட்டத்தை தேர்வு செய்து அதற்கான சுழற்கோப்பையினை உட்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியனுக்கும் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் வழங்கி கௌரவப்படுத்தினார்.



ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற சிறந்த செயல்பாடுகள் குறித்து பரிசீலனை செய்து சுழற்கோப்பை வழங்கப்படும் என்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.



இப்புதிய அணுகுமுறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுபோன்ற பாராட்டுக்கள் காவல்துறையினர் திறம்படச் செயல்படுவதற்கு ஊக்குவிப்பாக அமைகிறது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...