குழந்தையிடம் செயின் பறித்த திருடனை தாக்கிய 5-பேர் மீது வழக்குப்பதிவு.!!

குழந்தையிடம் செயின் பறித்து தப்பி ஓட முயன்ற நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். தர்ம அடி கொடுத்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் திருடனை தாக்கிய 5-பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: குழந்தையிடம் செயின் பறித்த திருடனைத் தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை பீளமேடு அருகே உள்ள வெற்றிவேல் நகரைச் சேர்ந்தவர் ராம் பிரகாஷ். இவரது மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் சித்ரா சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்துக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் குழந்தையின் கழுத்திலிருந்த இரண்டு பவுன் தங்க செயினை பறித்துத் தப்பிச் செல்ல முயன்றவரைப் பார்த்த ராம் பிரகாஷ் சத்தம் போட்டார்.

இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் தப்பி ஓட முயன்ற அந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். காவல்துறை நடத்திய விசாரணையில் அவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த துரைசாமி 57, ஓட்டுநர் என்பது தெரியவந்தது.

பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த அவரை காவல்துறை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து பீளமேடு காவல்துறை செயின் பறித்த துரைசாமி தாக்கிய 5-பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...