கோவையில் சோமனூருக்கு சொகுசு பேருந்து மட்டும் இயக்கம்..! இலவச பேருந்து பயணத்தை பயன்படுத்த முடியாத பெண்கள் சாதாரண பேருந்து விட கோரிக்கை!

பயணிகளின் கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை உக்கடம் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து சோமனூர் வழியாக செல்வதற்கு சொகுசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் இலவச பயண சலுகை மறுக்கப்படுவதாக பெண் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சாதாரண நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பெண்கள் பயணிக்கலாம் என உத்தரவிட்டார்.

அதன்படி, சிவப்பு நிறங்கள் சொகுசு பேருந்துகள் தவிர மற்ற நகரப் பேருந்துகளில் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்கிக் கொள்ளலாம்.

இந்நிலையில் உக்கடம் - சோமனூர், காந்திபுரம் - சோமனூர் செல்லும் அரசுப் பேருந்துகளில் பெரும்பாலும் சொகுசு பேருந்துகள் இயக்கப்படுவதாக பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது:-

உக்கடத்தில் இருந்து அவிநாசி சாலை வழித்தடத்தில் சாதாரண பேருந்துகளை இயக்கப்படுவதில்லை. சூலூர் வழியாக சோமனூர் செல்லும் வழித்தடத்தில் மட்டும் 2 சாதாரண பேருந்துகள் இயங்குகின்றன. காந்திபுரத்தில் இருந்து சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசு பயணச் சலுகை எங்களால் பயன்படுத்த முடியவில்லை. கட்டணம் அதிகமாக உள்ளது. எனவே இரு வழித்தடங்களிலும் சாதாரண பேருந்துகளை இயக்க வேண்டும். என்றனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரியிடம் கேட்டபோது:-

உக்கடம் - சோமனூர், காந்திபுரம் - சோமனூர் செல்லும் வழித்தடத்தில் தற்போது இரண்டு சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நீலாம்பூர் வரை இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சோமனூர் வழி தடத்தில் செல்வோர் நகரப் பேருந்துகள் தவிர புறநகர பேருந்துகளை பயன்படுத்துகின்றன.

இருப்பினும் பயணிகளின் கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...