திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் ஆயுத பூஜை விழா கோலாகலமாக கொண்டாட்டம்..!

கொரோனா இரண்டாவது அலை முற்றிலும் ஓய்ந்த நிலையில் பனியன் தொழிற்சாலைகள் சீராக இயங்கி வருவதால் ஆயுத பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் ஆயுத பூஜை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

திருப்பூரில் உள்நாட்டு ஆடை வர்த்தகம், வெளிநாட்டு ஏற்றுமதி நிறுவனங்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை தொழிற்சாலைகள் உள்ளன.

இந்த பனியன் தொழிற்சாலைகளில் கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு வருடந்தோறும் ஆயுத பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இரண்டாவது அலை முற்றிலும் ஓய்ந்த நிலையில் பனியன் தொழிற்சாலைகள் சீராக இயங்கி வருகின்றன.



இந்நிலையில், இந்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் ராக்கியாபாளையம், குமார் நகர், ஆலங்காடு, கருவம்பாளையம், லட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு பனியன் இயந்திரங்களை சுத்தம் செய்து, தொழிலாளர்கள் முன்னிலையில் சிறப்புப் பூஜைகள் நடத்தி ஆயுத பூஜை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



இதனையடுத்து, ஆயுதபூஜை வழிபாட்டின் போது பனியன் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...