கோவையில் லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.!!

லோட்டஸ் கண் மருத்துவமனையில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இலவச கண் பரிசோதனை செய்யப்படும். தொடர்பு கொள்ள: 74485-14851, 0422-4229970. முன்பதிவு செய்தவர்கள் இந்த சலுகையை நவம்பர் 14-க்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


கோவை: கோவையில் லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



கோயம்புத்தூர், அக்டோபர் 13, 2021 - கோவை லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

இது குறித்து லோட்டஸ் கண் மருத்துவமனையின் துணைத் தலைவர், தமிழ்ச்செல்வன் கூறும்போது:-

உலக கண் பார்வை தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக கண் பார்வை தினம் வருகின்ற அக்டோபர் 14-ஆம் நாள், 2021 வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

கண் பார்வை தினமானது உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் கண் பார்வை மற்றும் கண் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த தினம் உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது.

கண் பார்வை தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் சிட்டி இணைந்து ஒரு மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை லோட்டஸ் கண் மருத்துவமனையின் Optometry பயிலும் சுமார் 100 மாணவர்கள் மூலம் இன்று (புதன்கிழமை அக்டோபர்-13) காலை 8:30 மணிக்கு லோட்டஸ் கண் மருத்துவமனை அவினாசி சாலையில் உள்ள கிளையில் ஏற்பாடு செய்திருந்தது.



இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கோவை மாவட்ட ரோட்டரி கவர்னர் ரோட்டேரியன் எம்.டி.எஸ் ராஜசேகர் அவர்கள் கலந்து கொண்டு இந்த விழிப்புணர்வு பேரணியைக் கொடியசைத்துத் துவங்கிவைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில், லோட்டஸ் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சங்கீதா சுந்தரமூர்த்தி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர்.கே.எஸ். ராமலிங்கம், மருத்துவ இயக்குனர் டாக்டர். ஆர்.ஜெ. மதுசூதன் மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டியின் தலைவர் டாக்டர். என். செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



சிறப்புச் சலுகையாக உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு லோட்டஸ் கண் மருத்துவமனையில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இலவச கண் பரிசோதனை செய்யப்படும். இந்த சலுகையைப் பெற முன்பதிவு அவசியம். தொடர்பு கொள்ளவும்: 74485 14851, 0422 4229970. முன்பதிவு செய்தவர்கள் இந்த சலுகையை நவம்பர் 14-க்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...