தொடர் மழை காரணமாக உதகை மலை ரயில் பாதையில் மண் சரிவு.!! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் !!!

தொடர் மழை காரணமாக மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், ஆர்வமுடன் இயற்கை அழகை ரசித்து உதகை செல்லலாம் என்று மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.


கோவை: தொடர் மழை காரணமாக மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், ஆர்வமுடன் இயற்கை அழகை ரசித்து உதகை செல்லலாம் என்று மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஹில்குரோ ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஹில்குரோ ரயில் நிலையம் அருகில் பாறை மற்றும் மண் சரிந்து விழுந்து ரயில் பாதையை மூடி உள்ளது. இந்த நிலையில் இன்று காலை 07.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து 180-பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டுச் சென்றது.

கல்லாறு ரயில் நிலையத்தைக் கடந்து ரயில் சென்று கொண்டிருந்த பொழுது ரயில் முன் பெட்டியில் அமர்ந்திருந்த பிரேக் மேன் மரம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு ரயில் பாதை முழுவதுமாக மூடி இருந்ததைப் பார்த்து உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில் மலை ரயில் மீண்டும் கல்லாறு ரயில் நிலையத்திற்குத் திரும்பி வந்தது. பின்னர், அங்கிருந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கே 180- பயணிகளுடன் திரும்ப வந்து கொண்டுள்ளது.

ஆர்வமுடன் இயற்கை அழகை ரசித்து உதகை செல்லலாம் என்று மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

மேலும்,மண் சரிந்த இடத்தில் ரயில்வே ஊழியர்கள் சீர் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். சீரமைப்பு பணி முடிவடையும் வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்வதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...