கோவையில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!

இருவேறு பகுதிகளில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் இருவேறு பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் ஸ்ரீராம் அவென்யூ பகுதியை சேர்ந்த தாமோதரசாமி என்பவரின் மகன் தனஞ்சை (38). இவர் திருச்சியில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு இங்கு பூட்டிய நிலையில் இருந்துவந்தது.

இந்நிலையில், நேற்று அவரது வீட்டின் வேலைக்காரப் பெண் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கதவு உடைந்து இருப்பதாக கூறினார்.

இதையடுத்து, தனஞ்சை கோவைக்கு வந்து வீட்டை பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் தங்க மோதிரம் மட்டும் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தனஞ்சை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதேபோல, சரவணம்பட்டி அடுத்த அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகன் முத்து சரவணன் (39). கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் முத்து சரவணன் சென்றர்.

இந்த நிலையில், மீண்டும் நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க வளையல்கள், மோதிரம் என ஐந்தரை பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து முத்துசரவணன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...