கஞ்சா வியாபாரி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் பரிந்துரை.!!!

தொடர்ந்து கஞ்சா வியாபாரம் செய்து வந்த குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: தொடர்ந்து கஞ்சா வியாபாரம் செய்து வந்த குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம், வால்பாறை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் கஞ்சா வழக்கு குற்றவாளியான A.இயேசு (வயது-52) என்பவரைக் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் A.இயேசு (வயது-52) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

மேற்படி உத்தரவின் படி கஞ்சா வழக்கு குற்றவாளியான A.இயேசு(வயது-52) என்பவரைக் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 770810-0100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...