பொள்ளாச்சி அருகே தென்னை நார் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து..! விபத்தை பார்க்க வந்த முதியவர் விபத்தில் பரிதாபமாக பலி..!!

தீ விபத்தை பார்க்க வந்த போது இருசக்கர வாகனத்தின் குறுக்கே நாய் வந்ததால், விபத்தில் கீழே விழுந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: பொள்ளாச்சி அருகே நார் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் பார்க்க வந்த முதியவர் விபத்தில் பரிதாபமாக பலியானார்.

பொள்ளாச்சி கஞ்சம்பட்டி அடுத்த அம்மேகவுண்டனுாரில், 'ஆதவன் காயர்ஸ்' தென்னை நார் நிறுவனம் செயல்படுகிறது.

இந்நிறுவனத்தில், நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டு, தென்னை நாரில் தீ பரவியது. தீ விபத்தில், தொழிற்சாலை இயந்திரங்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், பைக், தென்னை நார் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

இது குறித்து தகவலறிந்து, அங்கு சென்ற பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தை காண, அம்மேகவுண்டனுாரை சேர்ந்த பரமன் (75) மகன் மணிகண்டனுடன் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியே ஸ்கூட்டரில் வந்த மோகன்ராஜ் என்பவர் பரமனை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

அப்போது, நாய் குறுக்கிட்டதால், ஸ்கூட்டர் நிலை குலைந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில், இருவரும் காயமடைந்தனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போது, பரமன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...