அரிசி மூட்டைகளை உரிமையாளர் கணக்கிட்ட போது பாஸ்மதி அரிசி உள்ளிட்ட விலை மதிப்புள்ள அரிசி மூட்டைகள் ரூ. 20 லட்சம் மதிப்புக்கு திருடு போயிருப்பது தெரிய வந்தது.
கோவை: கோவையில் அரிசி குடோனில் வைத்திருந்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகள் திருட்டு போன சம்பவத்தில் அரிசி கடை ஊழியர்கள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை தியாகராய புது வீதியில் அரிசி கடை வைத்துள்ள கிருஷ்ணகுமார் மற்றும் அவருடைய மனைவி கீதா அரிசி கடை நடத்தி வருகின்றனர்.
கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டாக போதுமான வியாபாரம் நடைபெறவில்லை. இருப்பினும் அரிசி மூட்டைகள் குடோனில் தொடர்ந்து குறைந்து கொண்டு வந்து உள்ளது.
இதனிடையே, அரிசி மூட்டைகளை உரிமையாளர் கணக்கிட்ட போது பாஸ்மதி அரிசி உள்ளிட்ட விலை மதிப்புள்ள அரிசி மூட்டைகள் ரூபாய் 20 லட்சம் மதிப்புக்கு திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து ஆர்.எஸ்.போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பரிமளாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது அரிசி கடைகளில் வேலை பார்த்து வேலைகளிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களும், தற்போது வேலையில் உள்ள 2 ஊழியர்களும் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.