கோவையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர் பணி இடை நீக்கம்..!!

மேலும், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றதுடன், மது வாங்க வரும் நபர்களிடம் அலட்சியமாக பேசி வந்து உள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.


கோவை: கோவையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியரை பணி இடை நீக்கம் செய்து வடக்கு மண்டல டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டார்.

டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், கோவை வடக்கு டாஸ்மாக் கடை எண் 1,540-ல் பணிபுரிந்த மனோகரன் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததுடன், மது வாங்க வரும் நபர்களிடம் அலட்சியமாக பேசி வந்து உள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதையடுத்து, கோவை வடக்கு மண்டல டாஸ்மாக் மேலாளர் பாபு இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் மதுபானங்களை அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்த விற்பனையாளர் மனோகரனை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...