கோவையில் அடையாள அட்டை இல்லாத சாலையோர வியாபாரிகளுக்கும் கொரோனா உதவித்தொகை வழங்கவேண்டும்- ஆட்சியர் மனு அளித்த வியாபாரிகள்!

கோவையில் அடையாள அட்டை இல்லாத சாலையோர வியாபாரிகளுக்குக் கொரோனா உதவித்தொகை வழங்கிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: தங்கள் குடும்பச் சூழல் மற்றும் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்திச்செய்துக்கொள்ளும் விதமாக பலர் சாலையோரங்களில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் சாலையோரங்களில் தள்ளுவண்டிகள் மூலமும், தரைக்கடைகள் மூலமும் காய்- கனிகள், பானிபூரி, விளையாட்டுப் பொம்மைகள், பூ வியாபாரம், துணி வியாபாரம் என பல தரப்பட்ட வியாபாரங்களை ஆயிரக்கணகான வியாபாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.



ஆனால் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்கினால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், கோவை மாவட்டத்தில் சாலையோர வியாபாரிகளிடம் அடையாள அட்டை இல்ல்லை என்றாலும் கொரோனா உதவித்தொகை ரூபாய் 1000 வழங்கவேண்டும் எனவும், தேர்தல் அறிக்கையில் கூறியது போல 15,௦௦௦ ரூபாய் வட்டியில்லாக் கடன் வழங்கிடவும் வியாபாரிகள் வலியுறுத்திவருகின்றனர். மேலும் பிரதமர் மந்தியின் ஆத்மநிர்வார் நிதியின மூலம்1,௦௦௦ ரூபாயை அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் நிபந்தனை இன்றி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இன்று மாவட்ட ஆட்சியரிடம் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் வழங்கினர்.



முன்னதாக சாலையோர வியாபாரிகள் கைகளில் சிஐடியூ கொடிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவவலக வளாகத்திற்கு முன்பாக தங்கள் கோரிக்கைகளை கோசங்களாக முழங்கினர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...