கோவை காந்திரப்புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள பெண் போலீஸின் வீட்டிலேயே பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கோவை: கோயம்புத்தூரையடுத்த சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர் மத்தியஅனைத்து காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிவருகிறார்.
இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக காந்திபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம், காவலர் குடியிருப்பில் உள்ள தங்களது வீட்டைப்பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான சூலூருக்குச் சென்றுவிட்டனர்.
பின்னர் நேற்று கோவை திரும்பிய நிலையில், வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்துக்கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தப் இந்திராணி உள்ளே சென்று பார்த்தப்போது, பீரோவில் இருந்த நான்கரை பவுன் தங்க நகைள் கொள்ளைப்போயிருந்தது தெரியவந்துள்ளது. இத்துடன் பீரோவில் இருந்த பணமும் மாயமாகியுள்ளது. இதனையடுத்து இதுக்குறித்து.
இந்திராணி காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.
குறிப்பாக மிகுந்த பாதுகாப்பு உள்ள காவலர் குடியிருப்பில் கொள்ளைப் போன சம்பவம் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.