கோவையில் வசிக்கக்கூடிய காதலனுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்த 10-ம் வகுப்பு படிக்க கூடிய 16-வயது தங்கையை அடித்து கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்த அண்ணன் கைது.
கோவை: கோவையில் வசிக்கக்கூடிய காதலனுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்த 10-ம் வகுப்பு படிக்க கூடிய 16-வயது தங்கையை அடித்து கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொன்ற அண்ணன் கைது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி கணபதி நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சங்கிலியம்மாள், இவர்களுக்கு கார்த்திக் வயது 20, என்ற மகனும் காயத்ரி 16, என்ற மகளும் உள்ளனர்.
காயத்ரி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். முருகேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விடவே மாற்றுத்திறனாளியான சங்கிலி அம்மாள் தனது 2-குழந்தைகளையும் வளர்த்து வந்தார். குடும்ப வருமானத்துக்காக கார்த்திக் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் காயத்ரி தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். அவர் யாரிடம் பேசுகிறார் என உறவினர்கள் கேட்டபோது கோவையைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பேசி வருவதும் அவர் காதலித்து வந்தது தெரிய வந்தது.
பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது அண்ணன் உறவு முறையைக் கொண்ட பாலமுருகன் என்பவர் கண்டித்தார். இருந்தபோதும் தொடர்ந்து காயத்திரி தனது காதலுடன் செல்போனில் பேசி வந்தார்.
நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு காயத்ரி தனது காதலனுடன் பேசியுள்ளார். இதனை கவனித்த பாலமுருகன் அவரை கண்டித்துள்ளார். அத்துடன் தாக்க ஆரம்பித்து கழுத்தை நெரித்து செல்போனை பிடுங்கி உடைத்தெறிந்து உள்ளார். காயத்ரி சுய நினைவின்றி மயங்கி விழுந்தார்.
வீட்டிலிருந்தவர்கள் அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பழனி டவுன் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். மேலும் அவருடன் செல்போனில் பேசிய நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.