கோவையில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் தற்கொலை செய்து கொள்வதாக கூறிய கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய போலீசார்..! குவியும் பாராட்டு!!

ஆலாந்துறை காவல் நிலைய பெண்கள் உதவி மைய ஏட்டு ஜானகி, கான்ஸ்டபிள் சுகன்யா ஆகிய இருவரும், கவுன்சிலிங் கொடுத்தனர்.


கோவை: கோவையில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறிய பெண்ணை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவையைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் கோல்கட்டாவுக்கு பணிக்காக சென்ற போது, அங்குள்ள பூஜா என்பவரை திருமணம் செய்தார். இருவரும் கோவை நரசீபுரம் வந்து கூலி வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், தம்பதிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு ஆலாந்துறை காவல் நிலையத்திற்குச் சென்றனர். அங்கு கணவருடன் செல்ல விருப்பமில்லை எனவும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பூஜா தெரிவித்தார்.

இதையடுத்து, ஆலாந்துறை காவல் நிலைய பெண்கள் உதவி மைய ஏட்டு ஜானகி, கான்ஸ்டபிள் சுகன்யா ஆகிய இருவரும், கவுன்சிலிங் கொடுத்தனர்.

பின்னர், 7 மாதம் கர்ப்பமாக இருந்த பூஜா முகாமில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டார். அவருக்கு கடந்த, 1ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில், ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., சுஹாசினி அறிவுரைப்படி, பூஜாவுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு, கணவருடன் சேர்த்து வைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, கவுன்சிலிங் வழங்கி பூஜாவை மீட்ட போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...