கோவை கிணத்துக்கடவு அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது - 3 பேர் தலைமறைவு..!!

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சென்றாம்பாளையம் கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வீராச்சாமி(21). இவரது தம்பி குணசேகரன்(19) நேற்று மாலை தனது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க வந்துவிட்டு திரும்பிச்செல்ல வாகனத்தை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் (26), சுரேந்திரன்(23), மிலன், வசந்தகுமார், விஜய் ஆனந்த் ஆகிய 5 பேர் குணசேகரனை பார்த்து முறைத்துக் கொண்டே வண்டி ஏன் ஸ்டார்ட் செய்கிறாய் என்று கேட்டு தாக்கியுள்ளனர்.

பின்னர், அருகிலிருந்த குணசேகரனின் அண்ணன் வீராச்சாமி அக்காள் மாரியம்மாள் (28) இருவரும் வந்து தடுத்த போது அவர்களையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் காயமடைந்த குணசேகரன் மற்றும் மாரியம்மாள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து குணசேகரனின் அண்ணன் வீராசாமி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குணசேகரன் மீது தாக்குதல் நடத்திய மணிவண்ணன் மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் 3 பேர் தலைமறைவாக உள்ளனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...