சம்பளம் போடுவதில் தாமதம்: கோவை மாவட்ட அரசு ஊழியர்கள் அதிர்ச்சி..!

அரசு ஊழியர்கள் பலரும் பல்வேறு கடனுதவி திட்டங்களில் தானியங்கி முறையில் மாதத் தவணையை பிடித்தம் செய்து கொள்ளும் முறையை பயன்படுத்துவதால் அதிர்ச்சி அடைந்தனர்.



கோவை: அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் வங்கி கணக்கில் செலுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டதால் கோவை மாவட்ட அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அரசு ஊழியர்கள் கூறியதாவது,

கோவை மாவட்டத்தில் காவல்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதம்தோறும் கடைசி வேலை நாளில் ஊதியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

மாதத்தின் கடைசி நாள் பொதுவிடுமுறை அல்லது ஞாயிற்றுக்கிழமை என வரும் பட்சத்தில் மாதத்தின் கடைசி நாளுக்கு முந்தைய நாளே வங்கிக்கணக்கில் ஊதியம் செலுத்தப்படும்.

இதனிடையே, அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் செப்டம்பர் 30-ம் தேதி வங்கிகளில் கணக்குகள் நிறைவடையும் நாள்(Account Closing Day) என்ற காரணத்தால் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் மறுதினம் தொழில் நுட்பக்கோளாறு எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வரை ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு காணப்பட்டது. ஒருவருக்கொருவர் மற்ற துறைகளில் நண்பர்களிடம் ஊதியம் செலுத்தப்பட்டதா என்று கேட்டபடி இருந்தனர். இதையடுத்து, தாமதமாக நேற்று முன்தினம் மாலை ஊதியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதை அடுத்து ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.

அரசு ஊழியர்கள் பலரும் பல்வேறு கடனுதவி திட்டங்களில் தானியங்கி முறையில் மாதத் தவணையை பிடித்தம் செய்து கொள்ளும் முறையை பயன்படுத்துகின்றனர். குறித்த தேதியில் வங்கிக்கணக்கில் பணம் இல்லாவிட்டால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இதுவே ஊதியம் பெறுவதற்கு ஏற்பட்ட கால தாமதத்தால் அரசு ஊழியர்கள் பலரும் அதிர்ச்சி அடைய காரணம்.

இவ்வாறு அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...