சிறுவாணி அணை நீர்மட்டம் 42.50 அடியாக உயர்வு.!!!

கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த சில வாரங்களாகப் பெய்து வரும் கனமழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42.50-அடியாக உயர்ந்துள்ளது.


கோவை: கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த சில வாரங்களாகப் பெய்து வரும் கனமழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42.50- அடியாக உயர்ந்துள்ளது.

கடந்த மாத தொடக்கத்திலிருந்து சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு தொடர்ந்து காணப்படுகிறது. நீராதாரமாகக் காணப்படும் அருவிகளிலிருந்து நீர்வரத்து காணப்படுகிறது. இதன் முத்திக் குளம், பட்டியாறு பாம்பாறு, உள்ளிட்ட அருவிகளிலிருந்தும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் கடந்த மாதம் தொடக்கத்தில் 41-அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது ஒரு மீட்டர் உயர்ந்து தொடர்ந்து 42-அடியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42.50-அடியாக உயர்ந்து இருக்கிறது. அணையின் முழு கொள்ளளவு 50-அடி ஆகும்.

பாதுகாப்பு காரணங்களைக் கூறி சில ஆண்டுகளாகவே கேரள அரசு 45-அடி நீர் இருப்பு வைத்து வருகிறது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டுவது இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

Newsletter

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...