வால்பாறையில் கொரோனா தடுப்பூசி மெகா முகாமை வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் ஆய்வு.!!

முகாமில் கொரானா தடுப்பூசி போட வருபவர்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. வால்பாறையில் உள்ள அனைத்துப் பகுதி மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


வால்பாறை: வால்பாறை வட்டார பகுதியில் கொரோனா தடுப்பூசி மெகா முகாமை வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசு அறிவித்துள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்படி வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து தேயிலைத் தோட்டங்கள், வால்பாறை அரசு மருத்துவமனை, வால்பாறை அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், முடீஸ் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், சோலையாறு நகர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் அனைவருக்கும் தடுப்பூசி என்ற அடிப்படையில் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் 18-மையங்களில் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த முகாமில் கொரோனா தடுப்பூசி போட வருபவர்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் வால்பாறையில் உள்ள அனைத்துப் பகுதி மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காலை 7-மணி முதல் இரவு 7-மணி வரை 18-வயதிற்கு மேற்பட்டவர்களுக்குக் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.



இந்நிலையில் வால்பாறையிலுள்ள சோலையாறு நகர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், பழைய வால்பாறை தேயிலைத் தோட்ட மருத்துவமனை, கருமலை தேயிலைத் தோட்ட மருத்துவமனை மற்றும் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் நேரில் ஆய்வு செய்தார்.

Newsletter

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...