கோவை விமானநிலையப் பின்புறத்தில் அழுகிய நிலையில் 65 வயதான ஆண் சடலம் கண்டெடுப்பு; போலீசார் விசாரணை!

கோவை விமானநிலையப் பின்புறத்தில் அழுகிய நிலையில் 65 வயதான ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே யாரும் காணாமல் போய் இருந்தால் சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட வேண்டும்.



கோவை: கோவையில் இன்று காலை 9 மணியளவில் SIHS காலனி, ஶ்ரீ மூகாம்பிகை அம்மன் நகர், வேட்டைக் காரன் கோவில் தெரு அருகில் அதாவது கோவை விமானநிலையம் பின்புறப் பகுதியில் உள்ள முள்வேளியில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்காநல்லூர் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்திவருகின்றனர்.

மேலும் உயிரிழந்தவரின் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் சரியாக அடையாளம் காணப்படவில்லை. எனவே கோவை மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் காணாமல் போனவர்கள் எவரேனும் இருந்தால் அவருடைய உறவினர்கள் சிங்காநல்லூர் காவல் நிலையத்தை அல்லது 9498101145, Inspector 9498173999 இந்த எண்ணிற்கு உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...