பொள்ளாச்சியில் பார் உரிமையாளரை ஏமாற்றிக் கொள்ளையடித்த 5 பேரை 24 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்; டிஐஜி, எஸ்.பி பாராட்டு!

பொள்ளாச்சியில் மதுபானகடையை ஏலத்திற்கு எடுக்கலாம் எனக்கூறி கடை உரிமையாளரை ஏமாற்றி அழைத்துச்சென்று கொள்ளையடித்தக் கும்பலை 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீசாரை இன்று டிஐஜி மற்றும் எஸ்.பி பாராட்டுகளைத் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த சதீஷ்குமார் சட்டத்திற்கு விரோதமாக மதுக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் புதிதாக மதுபானக்கடை ஒன்றைத் துவங்கி அக்கடையில் நமக்குத் தெரிந்தவர்களைப் பணிக்கு அமர்த்திக்கொள்ளலாம் ராஜா என்பவர் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்ட சதீஷ்குமார் மதுக்கடையை ஏலத்தில் எடுப்பதற்காக ரூபாய் 1,04,000/-பணத்தை வாங்கிக்கொண்டு வந்துள்ளார்.

பின்னர் ராஜா அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து மதுக்கடை ஏலத்தில் எடுப்பதாகக் கூறி இனோவா காரில் அழைத்துச்சென்றனர். அப்போது கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் பகுதியில் சென்றபோது ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சதீஷ்குமாரை மிரட்டி அவரிடமிருந்த ரூ.1,04,000/- பணத்தையும் அவர் அணிந்திருந்த 1/4 தங்க நகை மற்றும் அவரது செல்போனையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுக்குறித்து உடனடியாகப் பாதிக்கப்பட்ட சதீஷ்குமார் பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்கள் உத்தரவின்பேரில் பேரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமால் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து, தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் கொள்ளைக்கும்பல் நீலகிரி மாவட்டத்தில் தலைமறைவாக இருந்ததை அறிந்த நிலையில் அங்கு சென்று அவர்களை கைது செய்தனர். பின்னர் ராஜா, கண்ணன் கருப்பசாமி, ஈஸ்வரன் மற்றும் சிவக்குமார் ஆகியோர் மீது கொள்ளை வழக்குப்பதிவு செய்ததோடு அவர்களிடமிருந்து ரூபாய் 88,200/-,1/4 தங்க நகை, கைபேசி-1 மற்றும் அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.



இப்படி துரிதமாகச் செயல்பட்டு 24 மணி நேரத்தில் 5 பேரைக் கைது செய்த கிணத்துக்கடவு காவல்நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மாதவன், தலைமை காவலர் ஹைதர் அலி, முதல் நிலை காவலர் மெர்குரி ஆகியோருக்கு இன்று கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோவை சரக டிஐஜி முத்துசாமி, மற்றும் எஸ்பி செல்வ நாகரத்தினம் பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினர்.



Newsletter

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...