துடியலூர், அன்னூரில் மேலும் 2 உழவர் சந்தை உருவாகிறது.!!

இரண்டு உழவர் சந்தைகளைக் கோவை மாவட்டத்தில் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. துடியலூர், அன்னூர், குரும்பப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் உழவர் சந்தை அமைக்க முடிவு செய்த வேளாண் வணிகத் துறையினர் அதற்கான இடத்தை தேடி வருகின்றனர்.


கோவை: தமிழகத்தில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கவும் நுகர்வோருக்குக் குறைந்த விலையில் காய்கறி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் உழவர் சந்தைகள் ஆர்.எஸ் புரம் சிங்காநல்லூர், சுந்தராபுரம், வடவள்ளி, சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.

மேலும் இரண்டு உழவர் சந்தைகளைக் கோவை மாவட்டத்தில் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. துடியலூர், அன்னூர், குரும்பப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் உழவர் சந்தை அமைக்க முடிவு செய்த வேளாண் வணிகத் துறையினர் அதற்கான இடத்தை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரி கூறியதாவது:-

பேரூராட்சி பகுதியில் உழவர் சந்தைகள் அமைக்க வேண்டாம். கிராமப்பகுதிகளில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே காய்கறிகளை அன்றே வாங்கி செல்லும் வகையில் அதிகமான வாடிக்கையாளர்கள் வரக் கூடிய இடமாகத் தேட வேண்டியது உள்ளது.

தகுதியான இடம் தேர்வு செய்தவுடன் விரைவில் உழவர் சந்தைகள் திறக்கப்படும் இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...