மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் திருப்பூர் மாவட்டம் கருமஞ்சோறைப் பகுதியில் குளத்தைச்சுற்றி தடுப்புச்சுவர் அமைத்துத் தரக்ககோரி ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரையடுத்த கருமஞ்செறை ஊராட்சிப் பகுதியில் ஆதிதிராவிடர் காலனி ஒன்று உள்ளது.
இங்கு சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருப்பு பகுதிகளானது குளத்தை ஒட்டியுள்ளதால் மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்தைச் சந்திப்பதாகவும், விரைவில் குளங்கள் நிரம்பி மழைநீர் ஊருக்குள் புகுவதாக குற்றச்சாட்டினை மக்கள் முன்வைக்கின்றனர்.
இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நேற்று தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விட்டதாகவும், இதனால் வீட்டில் இருந்த ரேசன் கார்டு, ஆதார் அட்டை போன்ற ஆவணங்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தப்பிரச்சனை பல ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் நிலையில் இதுக்குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவி நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் தான் இதுக்குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கரும்பஞ்செறை பகுதியைச்சேர்ந்த 100 க்கு மேற்பட்ட மக்கள் நேரில் வந்து மனு அளித்தனர். மேலும் இந்த மனுவில் மழைநீர் வீடுகளுக்குள் புகாமல் இருக்க குளத்தைச் சுற்றி தடுப்புச் சுவர் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.