கோவையில் சேவல் திருடர்களை விரட்டிப்பிடித்த பொதுமக்கள்.!!

கிணத்துக்கடவு அருகே விவசாய தோட்டத்திலிருந்து சேவல்களைத் திருடிச் சென்ற மூன்று இளைஞரைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே விவசாய தோட்டத்திலிருந்து சேவல்களைத் திருடிச் சென்ற மூன்று இளைஞரைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள மெட்டுவாவி, வடசித்தூர், வெள்ளேகவுண்டன்புதூர் ஆகிய பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் வளர்க்கும் சேவல்களை மர்ம நபர்கள் திருடிச்சென்று வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் இன்று வெள்ளேகவுண்டன்புதூர் பகுதியில் பூபாலன் என்பவரின் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த சேவலை இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் திருடிச் சென்றதைப் பார்த்து விவசாயிகள் துரத்திச் சென்றனர்.

சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பிடிபட்ட அந்த 3-இளைஞர்களைப் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெகமம் காவல்துறையினரிடம் அந்த மூன்று இளைஞரை ஒப்படைத்தனர்.

சேவல் திருட்டில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள் சேரி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...