திருப்பூரில் 75-வது சுதந்திர தினம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சைக்கிளத்தான் நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.
திருப்பூர்: திருப்பூரில் 75-வது சுதந்திர தினம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சைக்கிளத்தான் நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.
இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டு கொண்டாடக்கூடிய சூழ்நிலையில் 75-வது ஆண்டு சுதந்திரம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான சைக்கிளத்தான் எனப்படும் சைக்கிள் பயண நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் மாநகராட்சி அலுவலகத்தில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
இதில் சிறுவர்-சிறுமியர் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு 8-கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். இதில் 75-வது ஆண்டு சுதந்திர தினம், பெண்கள் பாதுகாப்பு, ஸ்மார்ட் சிட்டி மற்றும் கொரோனா தடுப்பூசி போடுதல் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த சைக்கிள் பயணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.