கோவையில் பெண் ஓட்டல் ஊழியரிடம் சில்மிஷம் செய்த நபருக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவை ரேஸ்கோர்ஸ் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றிவரும் பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: திருச்சியைச் சேர்ந்த 23 வயதான பெண் கோவை ரோஸ்கோஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஊழியராக பணியாற்றிவருகிறார். வழக்கம் போல வேலை முடித்துவிட்டு தங்கியிருக்கும் விடுதிக்கு நடந்து சென்றிருந்தார்.

அப்போது எல்.ஐ.சி ரோடு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் இந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் அப்பெண் சத்தமிட்டவுன் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் உடனடியாக தப்பியோடியுள்ளார்.

இதுகுறித்து அந்த இளம்பெண் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் ஊழியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றன. மேலும் சாலைகளில் சிசிடிவி கேமிராவில் இச்சம்பவம் எதுவும் பதிவாகியுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...