கிணத்துக்கடவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை விபத்துக்குள்ளாக்கிய வழக்கில், சம்பந்தப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் மேட்டுக்கடை வீதியைசேர்ந்தவர் 52 வயதான பாலவடிவேல்.
இவர் கடந்த 26 ஆம் தேதி தனது நண்பர் சகாதேவனை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தாமரைக்குளம் சர்வீஸ் சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அதே வழியில் அவருக்குப்பின்னால் மற்றொரு இருசக்கர வாகனம், பாலவடிவேல் சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாலவடிவேலு அவரது நண்பர் சகாதேவன் மற்றும் விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தில் இருந்த அர்ஜுன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் படுகாயமடைந்த மூன்று பேரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் அங்கு முதலுதவி மட்டும் பெற்றுக்கொண்ட நிலையில் தற்போமு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் தான், வாகன விபத்தை ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கைக்கோரி இன்று பாதிக்கப்பட்ட பால வடிவேலு கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப்புகாதைப்பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இருசக்கர வாகன விபத்தை ஏற்படுத்திய கோவை உடையாம்பாளையத்தைச் சேர்ந்த அர்ஜூன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.