உணவு வாங்கித் தருவதாகக் கூறி 5 மாத குழந்தையைக் கடத்தி சென்ற மர்ம நபரால் பொள்ளாச்சியில் பரபரப்பு..!

குழந்தையைக் கடத்திச் சென்ற சம்பவம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே, 5 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர் ஊர் ஊராகச் சென்று பழைய துணி விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு, 5 மாத பெண் குழந்தை உட்பட 4 குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள், கடந்த ஒருவாரமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தங்கி துணி விற்பனை செய்து வருகின்றனர்.

நேற்று, (28ம் தேதி) இரவு, 9:30 மணிக்கு ஆனைமலை மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில் மணிகண்டன் உணவு வாங்கச் சென்றுள்ளார். அப்போது, சங்கீதா குழந்தைகளை வைத்து அமர்ந்திருந்த போது அங்கு வந்த ஒருவர், குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தருவதாக பணம் கொடுத்து, குழந்தைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி 5 மாத குழந்தையைக் கையில் வாங்கிக்கொண்டார்.

அப்போது, சங்கீதா உணவு வாங்க அருகில் சென்ற போது, அந்த நபர் மற்றொருவருடன் பைக்கில் பொள்ளாச்சி நோக்கி குழந்தையைக் கடத்திச் சென்றார்.

இதுகுறித்து, ஆனைமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தால், ஆனைமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து டி.எஸ்.பி சீனிவாசன் கூறுகையில்:-



குழந்தையைக் கடத்திச் சென்ற சம்பவம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது என்றும் அவர்களை விரைந்து கைது செய்வோம் என்றார்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...