கூண்டில் உள்ள புலிக்குட்டிக்கு உணவாக இறைச்சியும், தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது. ஊசி மூலம் மருந்தும் செலுத்தப்பட்டு வருகிறது.
கோவை: வால்பாறையில் பிடிபட்ட புலிக்குட்டிக்கு இரண்டாம் நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள முடீஸ் தேயிலைத் தோட்டப் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் புலி ஒன்று நடமாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் தீவிர தேடுதலில் ஒரு வயது மதிக்கத்தக்க புலிக்குட்டி ஒன்று காயமடைந்த நிலையில் பிடிபட்டது. மேலும், ரொட்டிக்கடை பகுதியில் உள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், திருநெல்வேலி வனத்துறை கால்நடை மருத்துவ பிரிவு பேராசிரியர் முத்துகிருஷ்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கூண்டில் உள்ள புலிக்குட்டிக்கு உணவாக இறைச்சியும் தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது. ஊசி மூலம் மருந்தும் செலுத்தப்பட்டு வருகிறது. மருத்துவத் துறையினரும் வனத்துறையினரும் புலிக்குட்டியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே, புலிக்குட்டி பிடிபட்ட 2 நாட்களில் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.