கோவை சுற்றுலாத்துறையுடன் இணைந்து கல்லூரிகள், தன்னார்வ அமைப்புகள் இணைந்து கொண்டாடிய உலக சுற்றுலாத்தினம்!

கோவை சுற்றுலாத்துறையுடன் இணைந்து கல்லூரிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து கொண்டாடிய உலக சுற்றுலா தின நிகழ்ச்சிகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்றுள்ளது.


கோவை: இன்றைய இயந்திர உலகத்தில் ஓயாதப் பணிகளுக்கிடையே நம்மை ரிலாக்ஸ் செய்வது சுற்றுலா என்று தான் கூற வேண்டும்.

சுற்றுலாவிற்கு செல்ல வேண்டும் என்றாலே ஒரு வித குஷியோடு கிளம்பிச்செல்வது இயல்பான ஒன்று. சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், இதுக்குறித்த விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலக சுற்றுலாத்தினமாகக் கொண்டாடப்படுகிறது.

கோவையைப் பொறுத்தவரை உலக சுற்றுலாத்தினத்தை முன்னிட்டு, ஆதரவற்ற முதியோர்கள் ஆதியோகி சிலை மற்றும் ஈஷா மையத்தினைச்சுற்றிப்பார்க்க கோவை மாவட்ட சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்தது. இதோடு மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டச்சுற்றுலாத்துறை சார்பாக ஸ்கால் கிளப்(SKAL CLUB), SIHRA, TAAC கோவை அரசு கலைக் கல்லூரி, அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் இணைந்து உலக சுற்றுலாத் தினத்தை மிகச்சிறப்பாகக் கொண்டாடியது.



இதன் மூலம் மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் முதியவர்களுக்கு இலவச சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்தது. மேலும் தூய்மைப் பணி, மரம் நடுதல், ரத்த தான முகாம், பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி, பொதுமக்களுக்கு குறும்படப் போட்டி, கல்லூரி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி, சுற்றுலா விழிப்புணர்வுக்கான சைக்கிள் பேரணி, சுற்றுலா பற்றியக் கருத்தரங்கம் மற்றும் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா ஆர்வலராக இணையும் நிகழ்ச்சி போன்றவை சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த உலக சுற்றுலா தின நிகழ்ச்சிகளில் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...