வீடு கட்டித்தந்த ரூ.8.70 லட்சம் பணத்தை திரும்ப தர வேண்டும்; ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் கட்டுமான நிறுவன உரிமையாளர் புகார்

திருப்பூரில் 8.70 லட்ச ரூபாயில் வீடு கட்டித்தந்தபிறகும், அதன் உரிமையாளர் பணத்தினை தர மறுப்பதாக கட்டுமான நிறுவன உரிமையாளர் மைதிலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் எஸ் ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மைதிலி. இவர் அப்பகுதியில் ஸ்ரீ சாய் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிறுவனத்தின் மூலம் அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் பலருக்கு வீடுகளைக் கட்டி தந்த நிலையில் தான், மங்கலம் பகுதியைச்சேர்ந்த சின்னராஜ் மற்றும் ரமணி ஆகியோர் வீடு கட்டித்தரக்கோரி மைதிலியை அணுகியுள்ளனர். அவரும் நம்பிக்கையின் பேரில் வீடு ஒன்றினை ரூபாய் 8.70 லட்சம் செலவில் கட்டித்தந்துள்ளார். ஆனால் இதுவரை இதற்கான பணத்தை சின்னராஜ் மற்றும் ரமணி ஆகியோர் கொடுக்கவில்லை என தெரியவருகிறது. இதனால் இதுக்குறித்து மைதிலி மங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை அந்தப்புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து தான், இன்று கட்டிட நிறுவன உரிமையாளரான மைதிலி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்தார். அதில் வீடுகட்டி தரச் சொல்லி பணத்தை ஏமாற்றிய சின்னராஜ் மற்றும் ரமணி மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்றும் மோசடி செய்தவர்களை கைது செய்ய வேண்டுமெனவும் எனவும் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....