கோவையில் சாலையோரத்தில் அமர்ந்து மது அருந்தியவர்களைப்பார்த்த நபருக்குச் சரமாரியாக கத்திக்குத்து; 2 பேரை கைது செய்து சிறையில் அடைப்பு!

கோவையில் சாலையோரத்தில் அமர்ந்து மது அருந்தியவர்களைப் பார்த்துக்கொண்டே சென்ற நபரை சரமாரியாக கத்தியால் குத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: சமீப காலங்களாக மது அருந்துவதன் விளைவாக பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறிவருகிறது.

இதனைத்தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுத்தாலும் மதுப்போதைக்கு அடிமையானவர்கள் இன்னும் திருந்தியப்பாடில்லை என்று தான் கூற வேண்டும். மேலும் போதையில் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தான் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இப்படி ஒரு சம்பவம் தான் இன்று கோவையில் நிகழ்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணா புரத்தைச்சேர்ந்தவர் 23 வயதான சிவா. பெயிண்டராக பணியாற்றி வரும் இவர் பணியை முடித்துவிட்டு தனது நண்பருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மலைப்பகுதியைச்சேர்ந்த 24 வயதான நிசாருதீன் மற்றும் 25 வயதான ஹரிஷ் ஆகியோர் சாலையோரத்தில் நின்று மது அருந்திக்கொண்டிருந்தனர். பொது வெளியில் இப்படி மது அருந்துகிறார்களே? என்று பார்த்துக்கொண்டே சென்ற பெயிண்டர் சிவாவை நிசாருதீன் மற்றும் ஹரிஷ் ஆகியோர் சேர்ந்து தாக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் அந்த இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெயிண்டர் சிவாவின் தலை மற்றும் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த சிவாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் நிசாருதீன் மற்றும் ஹரிஷ் ஆகிய இருவர் மீது குனியமுத்தூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த இருவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Newsletter

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...